நீங்கள் இருப்பது : முகப்பு // அபு தாபி, ஐக்கிய அரபு அமீரகம், குறும்படம் // விருது வென்ற தன்வீரின் புதிய திகில் படம்

விருது வென்ற தன்வீரின் புதிய திகில் படம்

துபாயில் ‘வாக்ஸ் சினிமாஸ்’ நடத்திய குறும்பட போட்டியில் தான் இயக்கிய ‘டோஸ்ட் தி கோஸ்ட்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படம் ஆகிய மூன்று விருதுகளை வென்ற தன்வீர் சயித் அடுத்ததாக ஒரு குறும்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதுவரை திகில் படங்களை கலாய்த்து இயக்கிய இவரரே இந்த முறை திகில் படத்தை எடுத்துள்ளார்.

நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விடுமுறை நாட்களில் படமாக்கப்பட்ட இந்த படம், தற்போது படத்தொகுப்பு வேலைகள் நடந்து வருகிறது. பொதுவாக தான் இயக்கும் படங்களை தன்வீரே நடிப்பது வழக்கம், இந்த படத்திலும் அஹ்மத் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேடலிற்கான ஆடிஷன் அபு தாபி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்று சில்விய என்னும் ஸ்பெயின் நாட்டு பெண் தேர்வானார். தன்வீரின் முந்திய படங்களில் பணியாற்றிய அமெரிக்க பெண் எமி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த லியாகத் இந்த படத்தில் சிறு பங்களிப்பை கொண்டு இருந்தாலும் பெரும்பாலான குழு இவரோடு புதிதாக பணிபுரிகிறவர்கள்.

கனடா நாட்டை சேர்ந்த வெல்ரி தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் ஒளிப்பதிவாளர் ஜாஃபர் சாதிக்கும் இருந்தது பெரும்பாலான வேலைகள் சுலபமாக இருந்ததாக தன்வீர் குறிப்பிடுகிறார். இதுபோக நியூ சீலாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஒலி துறையில் உதவி செய்ய உற்சாகமாக மற்ற வேலைகள் நடந்து வருகிறது. வழக்கமான தன்வீர் படங்களை போல இதுவும் உலகெங்கும் திரைப்பட விழாக்களில் தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Post to Twitter

Tags: , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.