நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, உலக சினிமா, ஊடகங்களின் பார்வையில், தமிழ் சினிமா // வழக்கு எண் 18/9 – ஊடகங்களின் பார்வையில்

வழக்கு எண் 18/9 – ஊடகங்களின் பார்வையில்

லுங்குசாமி தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்து இருக்கும் புதிய தமிழ்ப்படம் ‘வழக்கு எண் 18/9′. இந்த படத்தில் புதுமுகங்கள் ஸ்ரீ, மிதுன் முரளி, ஊர்மிளா மகாந்தா, மனிஷா யாதவ் நடிக்க விஜய் மில்டன் ஒளிப்பதிவில் முழுப்படத்தையும் கேனான் கேமெராவில் பதிவாக்கியுள்ளனர்.
எந்த ஒரு செய்தியையும் ஒரு கண்ணோடத்தில் பேசவோ, விமர்சிக்கவோ செய்யாமல் பலரது கருத்துகளை சேகரித்து ஓரிடத்தில் பகிர்ந்து ஒரு பகுதியாக வெளியிட வேண்டும் என்று சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக என்னுடன் இருப்பவர்களும் சொல்லிக்கொண்டு வந்தேன், அதை முழுவதுமாக துவங்கவில்லை என்றாலும் அதற்கான ஒரு  முயற்சியே இந்த பகுதி. ஆனால் இதுபோன்ற பகுதிகள் இன்று உலகெங்கும் சில ஊடகங்கள் முயற்சித்து வர துவங்கிவிட தமிழில் இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

ஊடகங்களின் பார்வையில் இந்த படத்தை எப்படி விமர்சித்து இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்…

இந்த படத்தை பற்றி பத்திரிக்கைகள் தாறுமாறாக பாராட்ட துவங்கின. அதில் முக்கியமாக ஆங்கில பத்திரிக்கையான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ – 4.5/5 புள்ளிகள் கொடுத்து ஆச்சர்யப் படச்செயதது. அடுத்து ஆனந்த விகடனின் 55/100 மதிப்பெண்கள்.

இதை போன்று தி ஹிந்து நாளிதழ், குமுதம் வார இதழ், சிபி இணையத்தளம், தினமலர் என்று எல்லாருமே பாராட்ட உலக தமிழ் ரசிகர்கள் கொண்டாட துவங்கினார்கள்.

அளவிற்கு அதிகமாக பாராட்டை பெறத் துவங்கியதும் சிலர் தவறுகளை தேடி இது உலக சினிமாவில் சேராது, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான பாலமெல்லாம் இல்லை என்று கடுமையாக விமர்சிக்கவும் துவங்கினர்.

கேபிள் ஷங்கர் இதை ஈரானிய படங்களுக்கு நிகராகவும், கீற்று இதை உலக திரைப்பட விழாக்களுக்கு செல்லும் என்று எழுதி இருக்கிறது.

இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களில் பிரபலமான ஒருவராக சேர்வு செய்யப்பட்ட ராஜன் ராதாமணாளன் தனது வலைப்பதிவில் தன்னை பாலாஜி சக்திவேல் மீண்டும் அழவைத்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

Lankasri:

டி.என்.ஏ மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிலும் இதை அவசியம் பார்க்க வேண்டிய படம் என்றும் பாராட்டியுள்ளது.

Deccan Chornicle:

இதற்கு இடையில் சில காட்டமான விமர்சங்களும் வந்தது.

நாஞ்சில் எக்ஸ்பிரஸ்™

அதிஷா:

Vanga blogalam

இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலு மகேந்திர பாராட்டிய காட்சி படங்கள்.

தனக்கே உரிய பாணியில் கோபமாக மிஷ்கின் பேசியதாவது.

சவுக்கு தளத்தில் கூட விமர்சனம் வந்துள்ளது.


சமீபத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று இசையமைப்பாளர் பிரசன்னா ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தார்.

இயக்குனர் முருகதாஸ் ட்விட்டரில் இந்த படத்தை இந்த வருடத்தின் சிறந்த படம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சிறப்பு நிகழ்ச்சி..

(இந்த பகுதியில் சில முக்கியமான பதிவுகள் பகிராமல் இருக்கலாம், சில இணைய முகவரிகள் தவறாகவோ அல்லது சில போலிப் பதிவுகள் கூட இருக்கலாம். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்)

தொகுப்பு: ஜாஃபர் ஷாதிக்

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.