நீங்கள் இருப்பது : முகப்பு // ஈரான், உலக சினிமா, மேற்காசிய நாடுகளின் சினிமா // முப்பத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு ஆஸ்கர் பரிந்துரையில் ஈரானிய திரைப்படம்

முப்பத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு ஆஸ்கர் பரிந்துரையில் ஈரானிய திரைப்படம்

உலகெங்கும் ஈரானிய படங்களுக்கு எப்போதுமே நல்ல பெயர் உண்டு. அதுவும் அந்நாட்டில் பலவிதமான சட்டதிட்டங்களை தாண்டி ஆபாசம், வன்முறை, வக்கிரங்கள் போன்ற காட்சிகள் இல்லாமல் நல்ல கதைகள்  கொண்டு உலக சினிமா எடுக்க முடியும் என்று நிருபித்து கொண்டே இருப்பது ஈரானியர்கள் மட்டுமே. உலகெங்கும் உள்ள எல்லாவிதமான சர்வதேசிய திரைப்பட விழாக்களில் இவர்களின் படங்கள் நிச்சயம் இருக்கும் என்றாலும் சிலநேரம் பெருவாரியான விருதுகள் இவர்களின் கரங்களை தொடமால் மறைந்து கொள்ளும், உதாரணமாக ஆஸ்கர் விருதுகள்.

1988 ஆம் ஆண்டு மஜீத் மஜீதீ(Majid majidi) இயக்கிய ‘சில்ரன் ஆப் ஹெவன்’ (Children of Heaven) படத்திற்கு பிறகு ஆஸ்கர் பரிந்துரையில் இந்த வருடம் தான் நுழைந்துள்ளது. அஸ்கர் பர்ஹதி(Asghar Farhadi) இயக்கிய ‘செப்பரேஷன்’(Seperation). ஈரானிய மொழியில் ‘ஜோடேய் ஈ நதர்’ (Jodai-e Nader az Simin).

இந்த படம் இதுவரை கிட்டத்தட்ட உலகெங்கும் நூறு சர்வதேசிய விருதுகளை வென்றுள்ளது. கடந்த வாரம் கோல்டன் குளோபல் விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஆஸ்கர் வெல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.