நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, உலக சினிமா, உலக நடப்புகள், சவூதி அரேபியா // ‘கத்(ந்)தம்மா’ – மலையாள திரைப்படம் அரபு நாடுகளில் திரையிட தடையா ?

‘கத்(ந்)தம்மா’ – மலையாள திரைப்படம் அரபு நாடுகளில் திரையிட தடையா ?

தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்த ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்தை எடுத்த கமாலுதீன் மொஹம்மத் புதிதாக எடுத்து இருக்கும் மலையாள படம் கத்(ந்)தம்மா. காவ்யா மாதவன், ஸ்ரீநிவாஸ், பிஜூ மேனன் நடித்து இருக்கும் இந்த படத்தில் ‘அஸ்வதி’ என்கிற பெண் தனது குடும்ப நிலைமை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் ஒரு வீட்டில் வேலை செய்யும் பணிக்கு செல்கிறார். அங்கே அவர் ஏராளமான இன்னல்களை சந்திக்கிறார், ஒரு கட்டத்தில் அங்குள்ள கொடுமைகள் தாங்க முடியாமல்பாஸ்போர்ட், பணம் என எதுவும் இன்றி அங்கிருந்து தப்பித்து விடுகிறார். பின்னர் என்ன நடக்கின்றது என்பதே கதை. சவுதியில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் கே.யு.இக்பால் இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.

இந்த வருடம் பெப்ரவரி நான்காம் தேதி வெளியான இந்த படம் ஒரு கோடி வரை வசூல் புரிந்துள்ளது. பெனட் வீட்ராக்(Bennet Veetraag) இசையில் ரபீக் அஹ்மத்(Rafeeq Ahamed) இசையில் ஸ்ரேயா கோஷல், ஹரிஹரன் பாடிய ‘விதுரமே யாத்ரா’ என்கிற பாடல் இந்த படத்தின் பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. இந்த படம் சவுதி உட்பட சில அரபு நாடுகளில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.