நீங்கள் இருப்பது : முகப்பு // இலக்கியம், கவிதை // கவிதை: யாரால் சபிக்கப்பட்டவர்கள் இந்த பூக்கள்

கவிதை: யாரால் சபிக்கப்பட்டவர்கள் இந்த பூக்கள்

ஈழத்து தமிழ் பெண்கள் – 36 வயதிலும்
அடிசல்லியில் கொக்கான்
…விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

வடக்கு கிழக்கு விதவைகள்
85 ஆயிரத்தையும் தாண்டி விட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன

தொழில் இல்லையா …? பெண்களை
விபச்சாரம் செய்ய சொல்கிறார்கள்
நம் நாட்டில் படித்த இராமர்களும் கூட …

ஆடுப்புளுக்கையை கூட்டியள்ளி
தோட்டத்தில் பசளை இடுகிறாள்
ஒரு பட்டதாரி பெண்

இலங்கையின் கல்வியறிவு 96 வீதம்
ஆகிவிட்டது – இதில்
வேலைவாய்ப்பு எத்தனை வீதம்

மகரந்தமணிகள் காற்றில் பறந்து
கல்யாணம் செய்து கொள்கின்றன
பூக்கள் கர்ப்பமாகின்றன – பாவிகளாகிவிட்டனர்
முதிர்கன்னிகள்

பேரீச்ச மரங்கள் கூட
பாலை வனத்தில் பூத்து காய்த்து
சிரித்துக்கொண்டிருக்கின்றன
மலையக பெண்களின் வியர்வை துளிகளையும்
பறித்து விடுகின்றன தேயிலை செடிகள்

யூரோக்களையும்… ஸ்டெலிங் பவுன்களையும்….
டொலர்களையும் .. ரூபாய்களுக்கு மாற்றி
நம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்
முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே …..

(08.03.2011 மகளிர் தினத்திற்காக நெடுந்திவு முகிலன் எழுதிய சிறப்புக் கவிதை)

Post to Twitter

Tags: , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.