நீங்கள் இருப்பது : முகப்பு // இலக்கியம், கவிதை // கவிதை: தோல்வி முடிவல்ல..

கவிதை: தோல்வி முடிவல்ல..

தோள்கள் சுருங்கி;
தோல்களும் சுருங்கி;
துவண்டுப்போன மனதிற்குத்;
துண்டுப்போடும் வெற்றிக்குப்
மாற்றுப்பெயர் தோல்வி!
அவமானங்கள்
அரவணைத்து;
வெகுமதிகள்
வெகுதொலைவில்;
நின்றுக்கொண்டு
நம்மை மென்றுத்திண்ணும்!
அடிப்பட்ட எண்ணத்திற்கு
ஆறுதலான வார்த்தைகளும்
வலியாய் தோன்றும்!
சுமையான நினைவுகளை
ரத்து செய்துவிட்டு
இரத்தத்திற்கு சத்திடுங்கள்;
வலிகளைப் பலிவாங்க;
வெத்தாய் இருந்த
வெற்றிக்கு வித்திடுங்கள்!

Post to Twitter

Tags: ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.