நீங்கள் இருப்பது : முகப்பு // இலக்கியம், கவிதை // நெடுந்தீவு முகிலன் கவிதைகள்

நெடுந்தீவு முகிலன் கவிதைகள்

அம்மா இல்லாத குருவிக்குஞ்சுகளே….
வாருங்கள் அனாதை இல்லத்தில் இணைத்து விடுகிறேன் –
அங்கே அம்மா இல்லாத குழந்தைகளோடு சேர்ந்து விளையாடலாம்.
*
ஏழைகளின் வீட்டுக்கும் வாருங்கள் விருந்தாளிகளே….
பரிமாறுவதற்கு – தாராளமாய் பசி இருக்கிறது.
*
தாய் பசுவை விட்டுவிட்டு கன்றுக்குட்டிகள்..
பால்க்காரனுக்கு – பின்னால் ஓடுகின்றன.
*

முகமூடிகளுக்குள் பத்திரமாய்
பதுங்கி இருக்கிறது
முகம்.
*

நகரத்து பாட்டிகளே –

உங்கள் பழைய சேலைகளைத் தாருங்கள்.
கிராமத்திலே குமரிகள் இருக்கிறார்கள்.
*

சிறைச்சாலைகளை மூடுங்கள்

பாடசாலைகளை திறவுங்கள் என்றால்….
சிறைச்சாலைகளுக்குள்ளும்
பாடசாலை மாணவர்கள்.
*

பூக்களுக்காய்
குரல் கொடுத்தவர்கள்
தேன் கூடுகளுக்கு
கல் எறிகிறார்கள்.
*

விருதுக்காக ஒருவன் எழுதுகிறான்.
விதவையான வெள்ளைத்தாள்களில்….
*

தெருநாய்கள் காலை உயர்த்தி

பூச்செடிகள் மீது சலம்விடுகின்றன.
*

அதோ தேர் ஓடும் தெருவில் இருந்து …

சற்று முன்னர்தான் துரத்தப்பட்டார்கள் பிச்சைக்காரர்கள்.
*
சவப்பெட்டி விற்பனை செய்யயும் கடைகளிலும்….
சாமிப்படங்கள்தான் தொங்குகின்றன.
*

இடம்பெயர்ந்தவர்கள் உட்க்காருவதற்கே
இடமில்லை வுhனத்தைத்தொட்டுவிடும்

அளவுக்கு தலைவர்களின் கட்டவுட்டுக்கள்.
*
காலையில் தேனீர் பருகுகிறோம்
அழகான வாசனையோடு –
அது மலையக பெண்களாக இருக்கலாம். *

Post to Twitter

Tags: , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.