நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, இலக்கியம், தமிழ் சினிமா, பேட்டிகள் // ‘முடிவு’ பாடலாசிரியர் நா.அனந்த கிருஷ்ணன் பேட்டி

‘முடிவு’ பாடலாசிரியர் நா.அனந்த கிருஷ்ணன் பேட்டி

புதுமுகங்கள் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் புதிய தமிழ் படமான  ‘முடிவு படத்தில் புதிதாக தனது பயணத்தை துவங்க இருக்கும் அந்த படத்தின் பாடலாசிரியர் நா.அனந்த கிருஷ்ணன் முதன்முறையாக அளித்து இருக்கும் பேட்டி. மருத்துவம் படித்த மருத்துவராக சேவை ஆற்றி வரும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் எழுத்து சேவையும் ஆற்ற வருகிறார். அவரின் பயணம் சிறக்கவும், இதுபோன்று உலகெங்கும் பல்லாயிரகணக்கான பேட்டிகள் கொடுக்கும் புகழ் பெறவும் ‘ஊடகம்’ சார்பாக வாழ்த்துக்கள்.

கவிஞர் நா.அனந்த கிருஷ்ணன், பாடலாசிரியர் நா.அனந்த கிருஷ்ணன் ஆனது பற்றி?

நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது மாநில அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்து கொள்வதற்காக கவிதை எழுத துவங்கினேன். அதன் பிறகு மெட்டுக்களோடு வெளிவந்த தமிழ் திரைப்பட பாடல்களுக்கு வேறு வரிகள் கொண்டு எழுத துவங்கினேன். விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு படத்தில் வரும் நிலவு பாட்டு என்னும் பாடலை கணித பாடத்தை கொண்டு எழுதியதே நான் எழுதிய முதல் கவிதை. பிறகு எழுதிய கவிதைகளை நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வைப்பேன். அதுக்கு அவர்கள் தரும் பதில் தான் என்னை கவிஞனாக்க  ஊக்கப்படுத்தியது.

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ஒரு இசை ஆல்பத்திற்கு நான் எழுதியதே நான் எழுதிய முதல் பாடல். அதன் பிறகு ஒரு குறும்படத்திற்கு பின்னணி அமைத்த ரூஃபி என் பாடல் வரிகளை பயன்படுத்தினார். அந்த நொடியில் இருந்து தான் நான் கவிஞன் ஆனேன். ரூஃபியிடம் நான் முதலில் ஒரு முழு பாடல் எழுதினேன் படத்திற்காக… அது ஒரு அமைதியான உணர்வுள்ள நல்ல பாடல். ‘கண் முன்னே’ என்று அந்த பாடல் ஆரம்பிக்கும்.

‘இயக்குனர்-பாடலாசிரியர்’,'இசையமைப்பாளர்-பாடலாசிரியர்’ இந்த இரு உறவிற்கும் உள்ள வித்தியாசம்?

இயக்குனருக்கும், பாடலாசிரியருக்கும் வணிக ரீதியான உறவு இருக்கும் அவர் நண்பராக இல்லாத வரை. இயக்குனர் ஒரு வார்த்தை நன்றாக ஒலிப்பதை விட அதிக பொருள் வேண்டும் என்று எண்ணுவார்.
இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் நிச்சயம் வணிக ரீதியான உறவு இருக்காது.அவர்களுக்குள் நட்பே இருக்கும். ஏனென்றால் ஒரு மெட்டை அழகான வார்த்தைகளுக்குள்ளும், அழகான வார்த்தைகளை நல்ல மெட்டை போடுவதும் நடந்து கொண்டே தானே இருக்கும்.
உங்களின் முதல் பட இசையமைப்பாளர் பற்றி?
ரூஃபி தான் என் முதல் பட இசையமைப்பாளர். அடுத்த வரும் காலங்கள் அவர் பேரை மட்டுமே சொல்லும். உலக இசையை அதிகம் நேசிக்கும் இசை அமைப்பாளர். மனிதர்களை மதிக்க தெரிந்தவர், குறிப்பாக அவரது ரசிகர்களையும் நண்பர்களையும் அதிகம் நேசிக் கூடியவர். இசை பற்றிய அவரது யுகங்கள் சரியாக இருக்கும், குறிப்பாக அவர் தினமும் பல மெட்டுகள் உருவாக்குவார். தற்போதைய பாடகர்கள் பலரின் நண்பரான இவருடன் ஜீவன், ‘முடிவு’ படத்தில் பணியாற்றியது ரொம்ப அற்புதமான நேரங்கள். யார் இசையமைத்து இருந்தாலும் அதை கை தட்டி பாராட்ட கூடிய அவரது பயணம் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.

சினிமாவின் பாடலாசிரியராக உங்களை அதிகம் கோபப்பட வைத்த சம்பவம் எது?
நான் தொழிலிற்கு புதுசு, என்னை விட்டுடுங்க ..

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பாடலாசிரியர்களில் உங்களை கவர்ந்த அதிகமான விசயங்கள் கொண்டவர்கள் ?
வாலி சார். இந்த வயதில் கூட அவரால் ‘டாக்சி.. டாக்சி’ என்று எழுத முடிகிறதே. வாலி சார் ஒரு ஆட்டோகிராஃப் .
உங்களது பெயர் நா.முத்துகுமார் போல் உள்ளதே, இதனால் உங்களது தனித்துவம் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?
நா.முத்துகுமார் ஒரு அற்புதமானவர். அவருகென்று ஒரு தனித்துவம் உண்டு, எனக்கும் தான். அதனால் என் தனித்துவம் பாதிக்காது என்று நினைக்கிறேன். நங்கள் இருவரும் தமிழ் வளர செய்வோம்.
துவங்கி இருக்கும் இந்த பயணத்தில் நீங்கள் மறந்தும் செய்துவிடக் கூடாது என்று நினைக்கிற விஷயம் ஏதும் உண்டா?
அப்படின்னு ஏதும் இல்லை, ஆனால் நான் நானாக இருக்கவே விரும்பிகிறேன்.
உங்கள் வாழ்வின் பிரதிபலிப்பு உங்கள் பாடல் வரிகளில் இருக்குமா?
இதுவரை அப்படி இல்லை, இனிமேல் அப்படி இருக்கலாம். வாழ்க்கை என்பதே ஒரு கவிதை தானே, அது நிறைய வார்த்தைகள் சொல்லித் தருகிறது.
உங்களை கவர்ந்த்த பிற மொழி கவிதை எது?
நான் மற்ற மொழி கவிதைகளை படித்ததில்லை. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நான் தமிழில் கூட மற்றவங்க கவிதைகள் அவ்வளவா படித்ததே இல்லை. என் கவிதைகளில் மற்றவங்களின் சாயல் ஏதும் இல்லாமல் தனித்துவமாக இருக்கவே விரும்பிகிறேன்.
‘முடிவு’ திரைப்படத்தை பற்றி..?
இந்த வாய்ப்பை ஏற்படுத்திய இறைவனுக்கு முதல் நன்றி.இந்த பட வாய்ப்பு எனக்கு தந்த ரூஃபிக்கு என் நன்றிகள். ஷிஹான் சாருக்கு ஒரு பெரிய சல்யூட். இதுவரை சொல்லப்படாத கதை, அதிலும் இசை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது. மூன்று பாட்டு கேட்டேன்,  ஷிஹான் சார் ரூபியானை அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று சொல்லிவருகிறார். நான் இரண்டு பாடல் எழுதி இருக்கிறேன். மனதை மயக்கும் பாடல்கள்.

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.