நீங்கள் இருப்பது : முகப்பு // இலக்கியம், பேட்டிகள் // ‘கோமாளி’ வலைப்பதிவாளர் பேட்டி

‘கோமாளி’ வலைப்பதிவாளர் பேட்டி

ஈரோட்டை சேர்ந்த ப.செல்வக்குமார், ‘கோமாளி‘ என்னும் பெயரில் இவர் ஒன்றரை வருடம் மேலாக ஒரு வலைப்பதிவு நடத்தி வருகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை சம்பந்தப்பட்ட படைப்புகள் இதில் இடம் பெற்று வருகிறது. இதில் 188  ஃபாலோவேர்ஸ் இருக்கிறார்கள்.அதே போன்று முல்லா கதைகள் போல சிறு சிறு நகைச்சுவைக் கதைகளை கொண்டு ‘செல்வா கதைகள்‘ என்று இந்த மார்ச் ஒன்றாம் தேதி ஒரு வலைப்பதிவை துவங்கி இருக்கிறார். ‘செல்வா கதைகள்’ துவங்கிய ஐந்தே நாளில் 21 பதிவுகளை இட்டு இருக்கிறார். வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவும் கூட..

அதென்ன ‘கோமாளி’ என்று பெயர் வைத்து இருக்குறீர்கள், அவர் நல்லவரா  கெட்டவரா?

அவர் நல்லவர் கெட்டவர் இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டியவர். அதாவது எப்படி சொல்லுறது ? அவர் ஒரு மொக்கையான மொக்கையை மட்டும் விரும்பும் நல்லவர். அதனால சில நேரங்களில் அவரின் மொக்கையைத் தாங்காதவர்கள் அவரை கெட்டவர் என்று சொல்லுவதும் உண்டு.   ஹி ஹி

அடுத்த மாதம் பதிமூன்றாம் தேதி தமிழகத்தில் தேர்தல் வருகிறதே, அதை வச்சி ஏதும் காமெடி பண்ற எண்ணம் இருக்கிறதா?
அதுதான் ஏற்கெனவே நடந்துட்டு இருக்குதுங்களே .,நான் என்ன இதுல காமெடி பண்ணுறது. அப்படி பண்ணினாலும் அரசியல் வாதிங்க பண்ணுற காமெடி அளவுக்கு வராது.

நகைச்சுவை என்பது போது வாழ்வி எந்தளவு இருக்க வேண்டும்?
என்னைப் பொறுத்த வரையில் எல்லா நேரங்களிலும் இருக்கலாம். அதே பழைய செய்திதான். நம்ம நகைச்சுவை ஒருத்தரை பாதிச்சா அதாவது மனதளவில் துன்புறுத்தினால் அது எந்த சூழ்நிலையிலும் தவறு , அப்படி இல்லாத போது எந்த சூழ்நிலையிலும் நல்லது.

கோமாளி ரசிகர் பற்றிய சுவாரஸ்யமான சம்பவம்?
அது நீங்கதான் சொல்லணும்.

வானொலி தொகுப்பாளர் ஆகனும் என்ற லட்சியம் எந்தளவு உள்ளது, அதற்கான முயற்சிகள் எப்படி இருக்கு ?
அதுக்கு ரொம்ப ரொம்ப ஆவலா இருக்கேன். முயற்சிகள் நடந்துட்டே இருக்கு. விரைவில் எனது குரலை காற்றலையில் பரவவிடுவேன்னு நம்பிக்கையில் நாட்களை நகர்த்துகிறேங்க. உங்களுக்கு எங்காவது தமிழ்நாட்டுக்குள்ள ரேடியோ ஜாக்கி நேர்முகத்தேர்வு நடக்குதுனு தெரிஞ்சா உடனே எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க. (thamizhbarathi@gmail.com)

உங்கள் படைப்புகளில் வருவது சேவையா, செய்தியா ?

கண்டிப்பா எனது பதிவுகளில் செய்தி கிடையாது.பெரும்பாலனவர்கள் சிரிச்சேன்னு சொல்லுறாங்க. அப்படின்னா சேவைன்னு சொல்லலாம். ஆனா சிலர் அழுதேன்னு சொல்லுறாங்க. அதுவும் ஒரு வகையில் சேவைதான். ஏன்னா அழுதா பாவம் குறையும். ஹி ஹி

Post to Twitter

Tags: , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.