நீங்கள் இருப்பது : முகப்பு // ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்திய நாடு, ஈரான், உலக நடப்புகள், ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய நாடுகள், ஓசானியா நாடுகள், கத்தார், கிழக்கு ஆசிய நாடுகள், குவைத், சவூதி அரேபியா, சிங்கப்பூர், சீனா, தென் ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகள், பஹ்ரைன், பாகிஸ்தான் // உலகெங்கும் சிறையில் வாடும் இந்தியர்கள்

உலகெங்கும் சிறையில் வாடும் இந்தியர்கள்

சட்டத்திற்கு புறம்பாக ஒரு நாட்டின் உள்ளே நுழைதல், கொலை மற்றும் கொள்ளை போன்ற பல்வேறு தவறுதலின் பெயரில் உலகெங்கும் உள்ள சிறைகளில் இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் வாடுவதாக தெஹெலகா இன்று செய்தி வெளியிட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6,795 இந்தியர்கள் சிறையில் வாடுவதாகவும் அதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமாக சிறையில் இருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

இந்தியாவிற்கு அடுத்து இந்தியர்கள் அதிகம் வாழும் நாடு மலேசியா என்றும் அதில் சொல்லப்படுகிறது. மலேசியாவில் மட்டும் இருப்பது லட்சம் இந்தியர்களும், அதனை அடுத்து சவுதியில் பதினெட்டு லட்சம் பேரும், அமீரகத்தில் பதினேழு லட்சம் பேரும் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் முப்பத்தி ஐந்து சதவீதம் இந்தியர்கள். இந்தியாவை அடுத்து இந்தியர்கள் அதிக சதவீதம் வசிக்கும் நாடும் இது தான்.

சிறையில் வாடும் இந்தியர்கள் என்று சொல்கையில் அமீரகத்தில் 1,681 பேரும், சவுதியில் 1,400 பேரும், மலேசியா 634 பேரும், நேபாளில் 377 பேரும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் 350 பேரும்  இருப்பதாக சொல்லபடுகிறது. இதனை அடுத்து வங்காளதேசம், சிங்கப்பூர், குவைத், கத்தார், ஈரான், தென் ஆப்ரிக்கா, இத்தாலி, பாகிஸ்தான், ஸ்லொவிகா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, இந்தோனிசியா, சீனா, தாய்லாந்து என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சமீபத்தில் இவர்களை இந்தியா சிறைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போது, அந்தந்த நாடுகளின் சிறையிலேயே இருந்து விடுவதாக கைதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Post to Twitter

Tags: , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.