நீங்கள் இருப்பது : முகப்பு // அபு தாபி, இலக்கியம், உலக நடப்புகள், ஐக்கிய அரபு அமீரகம் // அபு தாபி சர்வதேசிய புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

அபு தாபி சர்வதேசிய புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு (MENA~Middle East & North Africa) நாடுகளிலே மிகப்பெரிய புத்தக கண்காட்சியின் இந்த ஆண்டு பதிப்பு இன்று துவங்கி அடுத்த ஆறு நாட்கள் (மார்ச் 15-20, 2011) அபு தாபியில் அமைந்து இருக்கும் அபு தாபி தேசிய கண்காட்சி மையத்தில் (ADNEC~Abu Dhabi National Exhibition Center) நடைபெறும். அபு தாபி கலாச்சார மற்றும் பண்பாட்டு (ADACH~Abu Dhabi Arts & Cultural Heritage) நிறுவனத்தின் ‘கிதாப்’ (KITAB) நிறுவனமும் ஜெர்மனியின் பிராங்புட் புத்தக கண்காட்சியுடன் சேர்ந்து நடத்துகிறது.

இந்த ஆண்டிற்கான கண்காட்சியில் உலகெங்கும் அறுபது நாடுகளை சேர்ந்த 900  பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றனர். அதிலும் 545 அரபு பதிப்பகங்கள் கலந்து கொள்வது சிறப்பு அம்சம். மொத்தமாக உலகெங்கும் பல்வேறு மொழிகளில் இருந்து ஐந்து லட்ச்சத்திற்க்கும் அதிகமான புத்தகங்கள் இதில் இடம் பேரும்.

இந்த கண்காட்சியில் புத்தக அட்டை வடிவைப்பு,  அசையூட்டும் குழந்தைகள் புத்தகங்கள் பற்றி சொல்லி தரப்படுகிறது. மேலும் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்களின் எழுத்துக்களை எப்படி மின்னணு அந்தரங்க அபாயங்களில் இருந்தது காப்பது போன்றவை சொல்லிதரப்படுகிறது.
சமயற்கலை பற்றி எழுதுபவர்கள் அங்கே நேரடியாக செய்து கொடுப்பது போன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பிலிபைன்ஸ், தென் அப்ரிக்கா மற்றும் பின்லாந்து நாடுகளின் சமையல் கலையை கற்பதற்கு செய்வதற்கு சிறப்பு வகுப்புகளும் நடைபெறுகிறது.

மேலும் ஆப்பிள் போன்று உலகின் முன்னை நிறுவங்களின் மென்பொருள் மற்றும் ஐ-போட்(i-Pod), ஐ-பேட்(i-Pad), ஐ-பாக்ஸ்(i-Box) போன்றவற்றின் அப்ளிகேஷன்ஸ் ஆகியன செயல்முறை மற்றும் மொழிமாற்ற அப்ளிகேஷன்ஸ் ஆகியனவும் சொல்லிதரப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த கவிஞர்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியும், அல் அயன்னை சேர்ந்த ஒரு இசை குழுவின் ஹிப்ஹாப் நடன இசை நிகழ்ச்சியும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக உலகின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

  • இலக்கியத்திற்கு நோபல் பரிசு வென்ற எகிப்திய எழுத்தாளர் நகுப் மஹ்பௌஸ்(Naguib Mahfouz) கலந்து கொள்கிறார். இவர் ஐம்பதிற்கு மேற்பட்ட நாவல்களும், ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதைகளும் எழுதி இருக்கிறார்.
  • நார்வே நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ‘புக்செல்லர் ஆப் காபுல்’ (Bookseller of Kabul) என்கிற புத்தகத்தின் ஆசிரியர் அச்னே செய்யார்சாத் (Åsne Seierstad).
  • ‘தெ பியுட்டிபுல் மைன்ட்’ என்கிற புத்தகத்தை எழுதி பின்னாளில் அது புகழ்பெற்ற படமாக மாறிய கதையை எழுதிய சில்வியா நாசர் (Sylvia Nasar)
  • பெர்பூட் இன் பாக்தாத் (Barefoot in Baghdad) என்னும் கதையை எழுதிய எகிப்திய எழுத்தாளர் மணல் ஓமர் (Manal Omar)

Post to Twitter

comment closed