நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, தமிழ் சினிமா // அஜித்தின் மங்காத்தா, பில்லா 2

அஜித்தின் மங்காத்தா, பில்லா 2

நடிகர் அஜித் தனது ஐம்பது மற்றும் ஐம்பத்தி ஒன்றாவது பட வேளைகளில் பிஸியாக இருக்கிறார். முதலில் தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா’, இது கிரிக்கெட்டில் புகழ்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் நடக்கும் சூதாட்டத்தை பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ஸ்னேஹா, லக்ஷ்மி ராய், அஞ்சலி, வைபவ் ரெட்டி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

பாங்காக், மும்பை, சென்னை என சுத்தி சுத்தி ஷூட்டிங் நடந்து வருகிறது. பாடி மவுண்ட் கேமரா(Body Mount Camera) எனப்படும் முப்பது கிலோ எடையுள்ள ஒரு கமெராவை பயன்படுத்தி க்ளோசப் போன்ற காட்சிகள் எடுத்து வருகின்றனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவில், கே.எல்.பிரவீன் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மே ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். மங்காத்தாவை அடுத்து இவர் நடிக்கும் அடுத்த படம் ‘பில்லா 2′.

சலீம் மற்றும் ஜாவீத் என்ற இருவர் கதை எழுதி ஹிந்தியில் 1978′இல் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற டான், தமிழில் 1980 இல் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா ஆனது. மறுபடியும் டான் படத்தை ஷாருக்கான் நடிக்க தமிழில் அஜித் நடித்தார். ஒரே கதையை எல்லா சூப்பர் ஸ்டார்களும் மாற்றி மாற்றி நடித்து வெற்றி பெற்றது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா அறுபது கோடி வசூல் சானை புரிந்தது. இப்போது ஷாருக்கான் நடித்து வரும் டான்-2 இப்போது அப்படியே ரியமக் ஆகிறது. சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் பியூஷ் தயாரிக்கும் வைடு ஆங்கில கிரியேசன்  (Wide Angle Creations) மற்றும் ஹிந்துஜா கிரியேசன் (ஹிந்துஜா Creations) என்றும்சொல்லப்படுகிறது. ஆனால் பில்லா முதல் பகுதியை போன்று ஒளிப்பதிவை நிரவ்ஷா மற்றும் இசை யுவன் என்று உருதியாகி  இருக்கிறது. கதாநாயகி அனுஷ்கா ஷர்மா நடிக்க மார்ச் அல்லது ஏப்ரல் படப்பிடிப்பு துவங்கி இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மங்காத்தா ட்ரைலர்

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.