நீங்கள் இருப்பது : முகப்பு // இந்திய சினிமா, தமிழ் சினிமா // சினிமா விமர்சனம்: மன்மதன் அம்பு

சினிமா விமர்சனம்: மன்மதன் அம்பு

அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், தசவதாரம் போன்ற படங்களை போன்று கே.எஸ்.ரவி குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த திரைப்படம். மாதவனும் கமலுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார் (பார்த்தாலே பரவசம், அன்பே சிவம், நளதமயந்தி). கமல் படத்தில் அதிகமான படங்களில் காணப்படும் ரமேஷ் அர்விந்த், ஊர்வசி, ஸ்ரீமன் கூட்டணி. இப்படி எல்லாமே வழக்கமான கூட்டணி என்பதால் படமும் ஒரு வழக்கமான படமாக இருக்கும் என்று சென்றால் மற்ற படங்களை வேறுபடுத்தியே காட்டுகிறது. படத்தின் இயக்குனர் இவர் தானா என்கிற சந்தேகம் ஆரம்பத்தில் எழுந்தாலும் கடைசி ஒரு மணி நேரம் அடிக்கிற நகைச்சுவை கலாட்டவை பார்க்கும் போது இது நிச்சயம் கே.எஸ்.ரவி குமார் எடுத்து இருப்பார் என்று சொல்ல வைக்கிறது. (‘அன்பே சிவம்‘ படத்தை சுந்தர்.சி எடுத்துரிக்கும் போது இதை இவரும் எடுத்து இருப்பார்).

யாரும் எதிர்பார்த்து விடாதபடி ஆரம்பத்தில் நடிகர் சூர்யா கொஞ்சம் காட்சியிலும், ஒரு பாடலிலும் வந்து இருக்கிறார். (‘ஆதவன்‘ படத்தில் கே.எஸ்.ரவி குமார், உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் எடுத்த காட்சிகளோ?). மேஜர் ஆர்.மன்னராக கமலஹாசன், மதன் கோபாலாக மாதவன், அம்புவாக த்ரிஷா. இவர்களின் பெயர்கள் தாங்கியதே படத்தின் தலைப்பு மன்மதன் அன்பு.

படம் முழுவதும் ஐரோப்பியாவில் படமாக்கி இருகிறார்கள், குறிப்பாக க்ரூஸ் கப்பல் என அத்தனை காட்சிகளும் அத்தனை அழகா படம்பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன். அருமையான படத்தொகுப்பு ஷான் மொஹம்மத்.  இவர்கள் இருவரின் அதீத பணிகளை சொல்ல ‘நீளவான’ பாடலில் ஒன்றே போதும், முழு பாடலையும் ரிவர்சில் எடுத்து புதுமை படைத்து இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன் என்பதால் அவரது பாணி அதிகமாக தெரிகிறது. திரைக்கதையில் ட்விஸ்ட் சீன்ஸ், வசனங்களில் அதிக போது அறிவும் கலந்து சமுதாய பிரச்சனைகளும் தெரிகிறது. மதங்களில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாம் சொல்கிறது வசங்கள், அன்பே சிவம் சாயலில். நேற்று ஒன்றாக ஒரே நாட்டில் நம் சகோதர்களாக இருந்த பாகிஸ்தானிகளை இன்று எதிர்த்து சண்டை போடுகிறோம் போன்ற வசனங்கள் எந்த படத்திலும் பார்த்து விட முடியாதது. கிரேசி மோகன் இல்லை என்றாலும் கடைசி ஒரு மணி நேரம் நான் ஸ்டாப் காமெடி.

நடிகை நிஷாவை விரும்பும் மதன் அவர்களுடன் ஏற்படும் ஒரு சின்ன பிரச்சனையில் சிறு சண்டை நடக்கிறது, தனியாக ஐரோப்பிய செல்லும் நடிகை நிஷா என்கிற அம்பு அவளது பள்ளி தோழியுடன்(நடிகை சங்கீதா) தங்குகிறார். அங்கு மதன் உளவு பார்க்க மேஜர் மன்னரை அனுப்புகிறார், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது நண்பனின் (நடிகர் ரமேஷ் அர்விந்த், அவரது மனைவியாக ஊர்வசி) மருத்துவ செலவிற்காக அதை செய்கிறார். சில காரணங்களுக்காக பல பொய் சொல்கிறார், அங்கே மன்னருக்கும் அம்புவிற்கும் அறிமுகம் கிடைக்கிறது. அங்கே நடக்கும் கலாட்ட தான் கதை.

அன்பே சிவம் மற்றும் வேட்டையாட விளையாடு கலந்த கதை என்று நினைக்க தோன்றினாலும் நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் சந்தேகம் இல்லை.

Post to Twitter

6 Responses to " சினிமா விமர்சனம்: மன்மதன் அம்பு "

 1. Mi says:

  Another interesting post, it gets more and more exciting here.

 2. youporn says:

  Tɦanks very nice blog!

 3. beeg says:

  As the admin of this sitе is woгkіng, no doubt very shortly
  it will be famous, due to its quаlity contents.

 4. I used to ƅe able to fіnd good info from yoսr blog articles.

 5. youjizz says:

  Thanks veгy inteгesting Ƅlog!

 6. Hi, its nice post concerning medіa print, we all understand media is a impresѕive
  source of information.

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.