நீங்கள் இருப்பது : முகப்பு // குறும்படம் // நியூயார்க் திரைப்பட விழாவில் வென்ற அமீரக குறும்படம்

நியூயார்க் திரைப்பட விழாவில் வென்ற அமீரக குறும்படம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ‘நியூயார்க் ஐரோசியன் திரைப்பட விழா’வில்(New York Eurosain Film Festival) சிறந்த குறும்படத்திற்கான விருதை ஒரு ஐக்கிய அரபு அமீரக குறும்படம் வென்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க் நகரில் நவம்பர் மாதம் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழா இந்த ஆண்டு நவம்பர் பதினொன்று முதல் பதினான்கு வரை என நான்கு நாட்கள் நடைபெற்றது. இருபது நிமிடம் ஓடக்கூடிய வசனங்கள் இல்லாத காலித் அல் மஹ்மூத் (Khalid Al -Mahmood) இயக்கிய ‘சபீல்‘(SABEEL) என்கிற குறும்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இது இவரின் நான்காவது குறும்படம், இதற்கு முன்பு அஹ்லம் ஃபி சுண்டூக்(Ahlam Fi Sundook), செலிப்ரேசன் ஆப் லைப்(Celebration of Life) மற்றும் பின்த் அல் நோக்னிதா(Bint al Noknitha) ஆகிய குறும்படங்களை இயக்கி உள்ளார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிவந்த சில குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், இரு படங்களில் நடித்தும் உள்ளார்.

விருது வென்ற சபீல் படத்தின் திரைக்கதையை மொஹம்மத் ஹஸன் அஹ்மத்(Mohammed Hassan Ahmed) எழுத்து உள்ளார். இதே குறும்படம் கடந்த ஒரு ஆண்டுகளில் பல்வேறு சர்வதேசிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வென்றுள்ளது.

ஹுமாம் கஸல்(Humam Ghazal) படத்தொகுப்பு செய்ய தாஹா அல் அஜமி(Taha Al Ajami) இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் உதவி இயக்குனராக நவாப் அல் ஜனஹி (Nawaf Al janahi )பணியாற்றி உள்ளார். படத்தின் ஒளிப்பதிவு: சமீர் கரம் (Samir Karam).

-ஜாஃபர் ஷாதிக்.சி

Post to Twitter

Tags: , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.