நீங்கள் இருப்பது : முகப்பு // ஈரான், உலக சினிமா, ஐரோப்பிய நாடுகளின் சினிமா, குறும்படம், சிரியா, பாலஸ்தீன், மேற்காசிய நாடுகளின் சினிமா, ஸ்பெயின் // ஜோர்டான் குறும்பட விழாவில் வென்ற குறும்படங்கள்

ஜோர்டான் குறும்பட விழாவில் வென்ற குறும்படங்கள்

அரபுலகில் மிகப் பிரபலமான குறும்பட விழாவான ‘ஜோர்டான் குறும்பட விழா’ இந்த ஆண்டு நவம்பர் 17 முதல் நவம்பர் 20 வரை என நான்கு நாட்கள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நடைபெறும் இந்த குறும்பட விழா 2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திரைப்பட விழாவை பாலஸ்தீனை சேர்ந்த்த இயக்குனர் ஹசிம் எம். பிடார்(Hazim M.Bitar) நிறுவினார்.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த குறும்பட விழா தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 .30 மணி வரை மட்டுமே நடைபெற்றது. இதில் திரையிட உலகம் முழுவதும் இருந்து அனுப்பப்பட்ட குறும்படங்களில் இருபது அரபு குறும்படங்களும், சர்வதேசிய அளவில் இருபது குறும்படங்களும் தேர்வாகி இருந்தது. பல்வேறு பிரிவில் சிறந்த படங்களுக்காக தேர்வாகும் படங்களுக்கு 2000 அமெரிக்கா டாலர்கள் பரிசாக  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் சிரியாவை சேர்ந்த ரியாத் மக்தேச்சி(Riad Makdessi) இயக்கிய ஃப்ளு(Flu) சிறந்த படத்திற்கான விருதை வென்றது. அதே போன்று சர்வதேசிய அளவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த என்ரிக் கார்சியா(Enrique Garcia) மற்றும் ரூபன் சலாசர்(Ruben Salazar) ஆகிய இருவர்கள் இயக்கிய டைசி கட்டர்(Daisy Cutter) என்கிற குறும்படம் வென்றது. அதே போன்று சிறந்த ஆவணப்  படத்திற்க்கான விருதை பாலஸ்தீனை சேர்ந்த அலைநேஷன் ஆஃப் ஜெருசலம்(Alienation of Jerusalem) வென்றது, இதன் இயக்குனர் சாத் அறெளரி (Saad Arouri). அதே போன்று சர்வதேசிய அளவில் சிறந்த குறும்படத்திற்க்கான விருதை ஒரு இரானிய திரைப்படம் ‘மை ஹவுஸ் இஸ் க்ளவ்டி’(My house is cloudy) வென்றுள்ளது, இதன் இயக்குனர் கரீம் அஜிமி(Karim Azimi).
-ஜாஃபர் ஷாதிக்.சி

Post to Twitter

Tags: , , , , , , , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.