நீங்கள் இருப்பது : முகப்பு // உலக சினிமா, மேற்காசிய நாடுகளின் சினிமா // அபு தாபி வழங்கும் சிறந்த திரைக்கதைக்காண ஐம்பது லட்சம் மதிப்புள்ள பரிசு, இரண்டு பேர் பகிர்ந்து கொண்டனர்

அபு தாபி வழங்கும் சிறந்த திரைக்கதைக்காண ஐம்பது லட்சம் மதிப்புள்ள பரிசு, இரண்டு பேர் பகிர்ந்து கொண்டனர்

ஐக்கிய அரபு அமீரகத்  தலைநகர் அபு தாபியில் ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைக்கதைக்காண மாபெரும் போட்டி நடைபெறும். இது கடந்த நாலு வருடமாக நடைபெற்று வருகிறது. திரைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள் முதல் பணியாக ஒரு கதையை தேர்வு செய்து, அடுத்து அதற்கு திரைக்கதை எழுதுவர். அவர்களை ஊக்கவிக்கும் விதமாக முழு நீள   திரைகதைக்கே போட்டி வைத்து சிறந்தவைக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் அபு தாபியில் அமைந்து இருக்கும் எமிரேட்ஸ் பேலஸ் என்னும் இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு பங்கேற்ற திரைக்கதைகளின் எண்ணிக்கை நூற்றி ஐம்பது, அதில் சிறந்த ஆறு திரைக்கதைகளை எழுதியவர்களை அபு தாபிக்கு வரவைத்து அவர்களை கௌரவ படுத்தி இறுதியில் வெற்றி பெற்றவரை அறிவித்தனர். இதுவரை இல்லாத வகையில் இந்த வருடம் முதல் முறையாக இந்த பரிசு இருவருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இரு படங்களுமே பல வைகளில் சிறந்ததாக இருந்ததால் இந்த முறை இருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஈகிள் விசியன் மீடியா குரூப் நிறுவனத்தின் ஷேர் பெர்சன் ஷேய்க்ஹா அல் சின் சபாஹ் தெரிவித்தார்.Your Ad Here


இந்த ஆண்டு வெற்றி பெற்ற திரைக்கதைகள்
1. கஸீம் கர்சா (எகிப்த/அமெரிக்கா) எழுதிய ‘ஷெல்ட்டர்’.

இதன் கதை சுருக்கம்: லெபனான் தலை நகர் பெய்ரூட்டில் உள்ள ஈராக் அகதிகள் முகாமில் வாழும் ஒருவரை பற்றிய கதை.

2. டிமா ஹம்டன் (ஜோர்டான், ஐக்கிய ராஜ்ஜியம்) எழுதிய ‘கிட்னாப்’.

இதன் கதை சுருக்கம்: ஜோர்டான் காவல் அதிகாரியான ஒருவர் கடத்தப்பட்ட தனது பிரசவமான மனைவியை மீட்க போராடும் கதை.

இறுதி சுற்றுக்கு தேர்வான மற்ற நான்கு படங்கள்:

கிஹன் பைசா எழுதிய ‘புர்கான்’

முஹம்மத் அப்துல் மஜித் எழுதிய ‘பெய்த் சௌரீன்’

ரிப்கி அச்சாஃப்  எழுதிய ‘தி கர்வ்’

ராணா கஸ்கஸ்  எழுதிய ‘தமசீன்ஸ்’

அடுத்த ஆண்டிற்கான இந்த போட்டியில் விண்ணபிக்க ஏப்ரல் 2011 முதல் தொடர்பு கொள்ளலாம்.

- ஜாஃபர் ஷாதிக்.சி

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.