நீங்கள் இருப்பது : முகப்பு // இலக்கியம், சிறுகதை // நம்பிக்கை: சிறுகதை

நம்பிக்கை: சிறுகதை

அன்று இரவு அமைதியான இரவாக இல்லை. காற்றும், மழையும் வானிலை ஆய்வுகளின் அறிவிப்பும் புயல் சின்னம் என்று எச்சரித்த பிறகும் அவன் தன் கைத் துப்பாக்கியை எடுத்துப் பார்த்தான். நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய

எண்ணம் அன்று அவன் உறக்கத்தைக் கொன்றது . தோட்டாக்களை சரி பார்த்து எடுத்துக் கொண்டான்.Your Ad Here


அதேவேளை கதவை திறக்கும் தருணத்திலும் புயல் அறிவிப்பு அவன் செவிகளில் நுழைந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வெளியே வந்த அவன் தனது இரு சக்கர வாகனத்தை இயக்கினான். சரியாக முப்பது நிமிடங்களில் இலக்கை அடைந்தான். இது சரியான தருணமா என்று அப்பொழுது அவனுக்கு ஒரு குழப்பம் . ஆனாலும் நாளை என்னவாகுமோ என்று எண்ணி தன்னைத் திடப்படுத்தி கொண்டான். அங்கு யாருமில்லா இடத்திற்குச் சென்று சுடுவதற்கு ஆயத்தமானான். துப்பாக்கியின் வயிற்றை தோட்டாக்களால் நிரப்பினான். தன் இலக்கைக் குறி வைத்தான். பயிற்சியில் ஈடுபடும் அவன் கண்களில் நாளை துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது போல் நம்பிக்கை மின்னியது

-முஹம்மத் ஹாஃபில்

Post to Twitter

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.